இன்றைய கல்வி

எட்டடுக்கு மாளிகை
எந்நேரமும் ஓடும்
குளிர்ச்சாதன பெட்டி......

அழகானவிளையாட்டு
மைதானங்கள்

ஆயிரம் ஆசிரியர்கள்
பத்தாயிரம் மாணவர்கள்
சரியான சீருடை
அதிக பேருந்து வசதி

ஆகா எல்லாம்
இருக்கிறது இவ்விடம்
என் பிள்ளை படிக்க கிடைக்குமா
ஓர்இடம்...............?

பெருமூச்சு விட்டபடி
இழுத்துக்கொண்டு
போனான் மூட்டைகளை
ஏழைத் தகப்பன்
ஒருவன்........

எட்டாது உயரத்தில் இருந்து
என்ன பயன்
இன்றையக் கல்வி. ............?

எழுதியவர் : கவியரசன் (27-May-14, 2:54 pm)
Tanglish : indraiya kalvi
பார்வை : 2373

மேலே