சற்றுமுன் சேமித்துவிடு
மலைகுடையும் சாமி
சொல்வது
---------------மரம் சேமித்துவிடு
மாண்புமிகுவை உபசரித்துச்
சொல்வது
---------------மனிதம் சேமித்துவிடு
நதியை அடைத்தே
சொல்வது
---------------நீர் சேமித்துவிடு
தொழிலைக் கெடுத்தே
சொல்வது
---------------மின்சாரம் சேமித்துவிடு
தமிழைப் படுத்தியே
சொல்வது
---------------தமிழ் சேமித்துவிடு
குடிக்கக் கொடுத்தே
சொல்வது
---------------குடி சேமித்துவிடு
பாதசாரியும் கடனாளிக்குச்
சொல்வது
---------------பணம் சேமித்துவிடு
உதிரம் சிதறிய பிறகே
சொல்வது
---------------உயிர் சேமித்துவிடு
காடுகள் அழிந்தபின்
சொல்வது
---------------புலிகள் சேமித்துவிடு
வீடுகள் தனித்தபின்
சொல்வது
---------------உறவுகள் சேமித்துவிடு
யாதும் யாவும் விழிக்கச்
சொல்வது
---------------சற்றுமுன் சேமித்துவிடு