காலம்
![](https://eluthu.com/images/loading.gif)
தனிமையின் அரவணைப்பில்
அயர்ந்து உள்ளேன்
கண்துயிலும் முன் சில
நினைவுகள் வேக வேகமாய்
ஓட்டமிடுகின்றன
விரைவாய் ஓடும்
காலமே உனக்கு மணமுடிக்க
வேண்டும் அப்போதேனும்
நீ நிதானம் அறிந்து
கொள்வாய்
கள்ளமற்ற குழந்தை பருவத்தை
கல்வி தரும் குமரபருவத்தை
கன்னிகளை கனவில் கொண்ட
வாலிபத்தை எல்லாம்
விரைவிலேயே
பறித்து பறந்து
விடுகிறாயே...........
எண்ணங்களில் எல்லாம்
என் பழையன ஊற்றெடுகிறது
ம்ம்ம்...........
நாளை கண்விழிக்கையில்
இன்றென்பதும் பழையனவாகும்
என்றேனும் ஓர் நாள்
இந்நாளும் நினைவினில்
வரும். .........
அதற்கான அத்தாட்சியாய்
இவ்வரிகள் எல்லாம்
இடம்பெறும்...........
காலமே கொஞ்சம் பொறுமை
காப்பாயா உன்
பெருமைகளைத்
தான் எழுத்தில் வடிக்கிறேன்...........