ஓடுபாதை
இன்றுவரை
குழந்தை மனசு கைகூடாமல்
மழலைப் பருவத்தின் பிசிறுகளோடு
விழுந்து எழுந்து
போய்க் கொண்டு இருக்கிறோம்.
வேட்டை நாயின்
அதே தயார் நிலை
தயவு செய்து
அருள் கூர்ந்து
முகஸ்துதி
ஒப்பனைகளோடு
இரண்டறக் கலந்து விட்டோம்
எந்த துர்பாக்கியத்தின்
தாக்கத்தில் நாம்
பின்தங்கிவிட முடியும்?
ஓட்டமும் நடையுமாய்
வடிவமைக்கப்பட்டு விட்டோம்
நின்று நிதானிக்க நேரமில்லை
ஓடுபாதையில்
ஒவ்வொரு கணமும் போராட்டமே.