முல்லைவாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முல்லைவாசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-May-2014
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  14

என் படைப்புகள்
முல்லைவாசன் செய்திகள்
முல்லைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2014 9:16 pm

மவுனங்களின் இடைவெளியை
குறைப்பது யார்?
சளைக்காத போட்டி
சம நிலையிலேயே முடிகின்றது.

உனக்கும் எனக்குமான
காதல் சுடருக்குள்
கருவட்டம் விழாத வரை
ஒருவரை ஒருவர்
விரும்பிக் கொண்டே இருப்போம்

உனது
எண்ணங்களின் தொகுப்பில் நானும்
எனது
எண்ணங்களின் தொகுப்பில் நீயும்
எப்போதும் வாழ்வோம்

மனசு நிறைந்தவர்கள்
மட்டுமே
மண்ணில் வாழ்பவர்கள்

மேலும்

அற்புதமான கவிதை. மனசு நிறைந்தது...! 29-May-2014 9:31 pm
முல்லைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2014 9:08 pm

பாகுபாடுகள் பார்க்காமல்
பரவி விடுகின்றன வேர்கள்
வேர் பற்றை
நம்மால் பின்பற்ற முடியவில்லை

அடையாளங்களை
விரும்பாமலேயே வேர்கள்
வியாபித்து வியாபித்து
காற்றையும் நிழலையும்
வாரி வழங்குகின்றன.

திசைகளை பிரிக்காமல்
வேர்கள் திண்மையோடு இருக்கின்றன
விதவிதமான பிரிவினைகளால்
நமது வானத்திலும் பூமியிலும்
விரிசல்கள்.

மண் பிடிக்கும் வேராய்
மலர் பிடிக்கும் கிளையாய்
பூச்சுக்கள் அற்று இருப்போம்
மெருகுகள்
எப்போதும் கருகும்.

மேலும்

உங்கள் கவிதையின் வேர்கள் ஆழமானவை. அவை விருட்சங்கள் பல தரலாம் -கவித்தாசபாபதி 29-May-2014 9:35 pm
முல்லைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2014 7:55 pm

இன்றுவரை

குழந்தை மனசு கைகூடாமல்

மழலைப் பருவத்தின் பிசிறுகளோடு

விழுந்து எழுந்து

போய்க் கொண்டு இருக்கிறோம்.

வேட்டை நாயின்

அதே தயார் நிலை

தயவு செய்து

அருள் கூர்ந்து

முகஸ்துதி

ஒப்பனைகளோடு

இரண்டறக் கலந்து விட்டோம்

எந்த துர்பாக்கியத்தின்

தாக்கத்தில் நாம்

பின்தங்கிவிட முடியும்?

ஓட்டமும் நடையுமாய்

வடிவமைக்கப்பட்டு விட்டோம்

நின்று நிதானிக்க நேரமில்லை

ஓடுபாதையில்

ஒவ்வொரு கணமும் போராட்டமே.

மேலும்

ஓடாதே! வாழ்ந்துபார்... 28-May-2014 12:10 am
உண்மையான வரிகள் தோழரே.... பிறந்ததிலிருந்து எடுத்த ஓட்டம் மரணம் வரை தொடரும்....! 27-May-2014 8:03 pm
முல்லைவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2014 7:53 pm

விடுபடத்தான்

விரும்புகிறோம்

விருப்பங்களைத் தாண்டிய

கட்டாயங்கள்

எப்போதும் துரத்துகின்றன

ஒவ்வொரு கட்டமும்

நிறைவடையாமல்

அடுத்த கட்டத்தில்

வந்து சேர்கின்றன

பாறையின் இடுக்குகளில்

வேரின் பற்றாய்

வாய்க்கும் சிறு கணங்கள்

தவிக்கவும் துடிக்கவும்

தயவின்றி விரட்டுகின்றன.

மேலும்

எதார்த்தம்.... உண்மை...! படைப்பு அருமை 27-May-2014 8:10 pm
முல்லைவாசன் - முல்லைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2014 9:18 pm

காலையில் நாங்கள் தட்டும்
கடப்பாறையின்
ஓசையில்தான் அந்த கதிரவனே
கண் விழித்துக் கொள்கிறான்.

நாடாக்கள்
பாடும் போதெல்லாம்
நாங்கள் ஆடுகிறோம்.

எங்கள் பாதங்கள்தான்
மாறி மாறி மிதிக்கின்றன
ஆனால்
எங்களுக்கான பாதைகள் மட்டும்
மாறாமலிருக்கின்றன.

ஆள்பாதி ஆடைபாதி
பழமொழி
பழக்கப்பட்டதுதான்
ஆனால்
நாங்கள் ஆள் மட்டும்
பாதியாய் போய்விட்டவர்கள்
ஆடை ஆடையாய்
“நெய்து நெய்தே”

இழைக்கு இழை
மணமுடித்து வைக்கும்
பதிவுதி திருமணத்தை எங்கள்
மனைவி முதல் சகோதரி வரை
செய்து வைக்கின்றார்கள்.

மேலும்

நன்றி தோழமையே 27-May-2014 7:46 pm
மிக அற்புமான கவிதை. எதிர்மறை உத்தி யழகில் கவிதை கம்பீரமாக நிற்கிறது. உள்ளிருக்கும் நெசவாளியின் வாழ்க்கை மனசை நெருடுகிறது. 26-May-2014 11:06 pm
முல்லைவாசன் - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2014 9:47 pm

மழை ! கவிஞர் இரா .இரவி !

வானிலிருந்து விழுந்தும்
காயம் இல்லை
மழை !
.
துயரம் தீர்ந்தது
தூய்மைமிகு தூய
மழை !

வெப்பமயமாதலை
தடுத்து வென்றது
மழை !

கொளுத்தும் கோடையை
குளிராக்கி மகிழ்வித்தது
மழை !

கடலிலும் பொழிந்தது
மீன்களும் மகிழ்ந்தன
மழை !

வாடிய பயிர்களின்
வாட்டம் போக்கியது
மழை !

உதிர்ந்த இலைகள் மீண்டும்
துளிர்த்தன மரங்களில்
மழை !

வராது வந்தது
வரமாகப் பொழிந்தது
மழை !

பூமி குளிர வானம் அனுப்பிய
ஜீவ அமிர்தம்
மழை !

பஞ்சம் போக்க பசுமை செழிக்க
வந்த சீதனம்
மழை !

உலகப்போர் தவிர்க்க
உலகத்திற்கு செய்த உதவி
மழை !

கொட

மேலும்

மிக்க நன்றி . அன்புடன் இரா .இரவி 10-May-2014 8:07 am
அரு மழை அருமை பெருமழை கவி பெய்தமை மகிழ்ச்சி குளிர்ச்சி 09-May-2014 5:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே