நிறைவு
மவுனங்களின் இடைவெளியை
குறைப்பது யார்?
சளைக்காத போட்டி
சம நிலையிலேயே முடிகின்றது.
உனக்கும் எனக்குமான
காதல் சுடருக்குள்
கருவட்டம் விழாத வரை
ஒருவரை ஒருவர்
விரும்பிக் கொண்டே இருப்போம்
உனது
எண்ணங்களின் தொகுப்பில் நானும்
எனது
எண்ணங்களின் தொகுப்பில் நீயும்
எப்போதும் வாழ்வோம்
மனசு நிறைந்தவர்கள்
மட்டுமே
மண்ணில் வாழ்பவர்கள்