போலச் செய்தல் எனும் பொய்

நீங்கள் நல்லவர்களாக
இருக்கிறீர்கள் என்பதால்
நானும்
நல்லவனாக இருக்கிறேன் !
ஆகவே,
நான் நல்லவனில்லை !

நீங்கள்
கெட்டவர்களாக
இருக்கிறீர்கள் என்பதால்
நானும்
கெட்டவனாக இருக்கிறேன் !
ஆகவே,
நான் கெட்டவனில்லை !

நீங்கள்
சுதந்திரமாக
இருக்கிறீர்கள் என்பதால்
நானும்
சுதந்திரமாக இருக்கிறேன் !
ஆகவே,
நான் சுதந்திரமாயில்லை !

நீங்கள்
மகிழ்ச்சியாக
இருக்கிறீர்கள் என்பதால்
நானும்
மகிழ்ச்சியாய் இருக்கிறேன் !
ஆகவே,
நான் மகிழ்ச்சியாயில்லை !

நீங்கள்
புனிதமாய்
இருக்கிறீர்கள் என்பதால்
நானும்
புனிதமாய் இருக்கிறேன் !
ஆகவே
நான் புனிதமாயில்லை !

நீங்கள்
புனிதமாயில்லை என்பதால்
நானும்
புனிதமாயில்லை !
ஆகவே
நான் புனிதமாயில்லை
என்பதில்லை !

நீங்கள்
நீங்களாய்
இருக்கிறீர்கள் என்பதால்
நானும்
நானாக இருக்கிறேன் !
ஆகவே
நான் நானாகயில்லை !

உங்களுக்கு
இந்தக்கவிதை
புரியவில்லை என்பதால்
எனக்கும்
இந்தக்கவிதை புரியவில்லை !
ஆகவே,
எனக்கு இந்தக்கவிதை
புரியாமலில்லை !


- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (29-May-14, 8:40 pm)
பார்வை : 161

மேலே