வேர்கள்
பாகுபாடுகள் பார்க்காமல்
பரவி விடுகின்றன வேர்கள்
வேர் பற்றை
நம்மால் பின்பற்ற முடியவில்லை
அடையாளங்களை
விரும்பாமலேயே வேர்கள்
வியாபித்து வியாபித்து
காற்றையும் நிழலையும்
வாரி வழங்குகின்றன.
திசைகளை பிரிக்காமல்
வேர்கள் திண்மையோடு இருக்கின்றன
விதவிதமான பிரிவினைகளால்
நமது வானத்திலும் பூமியிலும்
விரிசல்கள்.
மண் பிடிக்கும் வேராய்
மலர் பிடிக்கும் கிளையாய்
பூச்சுக்கள் அற்று இருப்போம்
மெருகுகள்
எப்போதும் கருகும்.