பலவும் ஒன்றாகி
ஈரம் சுமந்த இலைகளின் அசைவில்
என் மூச்சும் சேர்ந்து குளிர...
காலைக் கதிரவனின் வெம்மையிலும்
என் நடையில் மண் வாசனை...
அசந்து விழித்த அசதி தீர
கிரீச்சிடும் பூச்சிகளும் பறவைகளும்...
ஓடிய உயிர்களின் சலசலப்பில்
என் இதயமும் தாளம் போட...
பச்சைக் கம்பள விரிப்பைக் கண்டு
என் கண்களும் புத்துணர்ச்சி கொள்ள...
மேற்க் கூரை மூடிய மெது வானம்
தொட்டணைக்காமல் என்னைப் பாதுகாக்க...
அடிமேல் அடி வைக்க அண்ணாந்து நோக்கும்
அன்னை மண் என்னைத் தாங்க...
போகிற போக்கில் மெல்ல வருடும்
மென் காற்றும் என்னைத் தீண்ட...
கதிரவனின் கதிர்கள் இலைகளின் ஊடே
என் மேல் பட்டு சிறு கவி பாட...
மனக்கலக்கமெல்லாம் மறைந்து போக
மனசெல்லாம் காதல் இயற்கையின் மேல்...