கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

செல்வத்துள் சிறந்த செல்வம்
கல்விச் செல்வம்
கற்றவன் அறிவாளி
போற்றப் படவேண்டும்
கல்விக்காக ஏங்குவோர் பலர்
அவர்களுக்கு கல்வி எட்டாக் கனி ஆகிறது
கற்கும் திறன் எல்லோருக்கும் உண்டு
உணர்ந்து கொண்டவன் விழித்துக் கொள்கிறான்
சிலர் கோட்டைவிட்டு பின் ஏங்குகின்றனர்
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா

வளர்ந்தால் மட்டும் போதாது
அறிவில் வளர்ச்சி அடைய வேண்டும்
மனிதன் முழு மனிதன் ஆகிட கல்வி அவசியம்
கல்விக்கு நிகரான செல்வம் ஏதுமில்லை
கற்றது கற்பது ஒருவருக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் பலன் தரும்

கற்றுவிட்டால் கல்வியுடன்
பண்பு ஒழுக்கம் தானே வந்து விடும்
கல்லாதவன் இருந்தும்
இல்லாதவன் போல் வாழ்கிறான்
குறையற்ற வாழ்வில்
நிறைவான செல்வம் கல்வி

கல்வி வளர வேண்டும்
இன்னும் இன்னும்
கற்றவன் வாழ வேண்டும்
இன்னும் இன்னும்
என்று ஆசைப்படுவோம்
போற்றுவோம் வாழ்த்துவோம் கல்வியை

அரசற்கு தன் தேசம் அல்லாது
சிறப்பில்லை
கற்றோருக்கு சென்ற இடமெலாம் சிறப்பு
கற்போம் கற்றுத் தருவோம்
செல்வோம் செல்வத்தை நோக்கி
வளர்ப்போம் பண்புள்ள தேசத்தை .........

எழுதியவர் : கல்வி (29-May-14, 9:17 pm)
பார்வை : 22906

மேலே