நெசவாளி

காலையில் நாங்கள் தட்டும்
கடப்பாறையின்
ஓசையில்தான் அந்த கதிரவனே
கண் விழித்துக் கொள்கிறான்.

நாடாக்கள்
பாடும் போதெல்லாம்
நாங்கள் ஆடுகிறோம்.

எங்கள் பாதங்கள்தான்
மாறி மாறி மிதிக்கின்றன
ஆனால்
எங்களுக்கான பாதைகள் மட்டும்
மாறாமலிருக்கின்றன.

ஆள்பாதி ஆடைபாதி
பழமொழி
பழக்கப்பட்டதுதான்
ஆனால்
நாங்கள் ஆள் மட்டும்
பாதியாய் போய்விட்டவர்கள்
ஆடை ஆடையாய்
“நெய்து நெய்தே”

இழைக்கு இழை
மணமுடித்து வைக்கும்
பதிவுதி திருமணத்தை எங்கள்
மனைவி முதல் சகோதரி வரை
செய்து வைக்கின்றார்கள்.

எழுதியவர் : முல்லைவாசன் (26-May-14, 9:18 pm)
பார்வை : 457

மேலே