நான் தேடும் செவ்வந்தி பூவிது

எனது உள்
வெளியே இல்லை
அதனின் வெளி
எனது உள் இல்லை....
கடவுளைத்
தொலைப்பவன் நான்.....
பேராசைக்காரன்,
கடவுளாகியும்
தொலைப்பவன் நான்..
கடந்த உள்ளம்
வேண்டி
கடந்த உள்ளத்தையும்
கடப்பவன் நான்...
புல் வேண்டி
புலியின் சாயலில்
நான்,
பூனையின்
புருவம் தாங்கி
புல் தீண்டும் காளை கொல்பவன்....
கொலைகளின் கலைகளில்
கோபுர தீபம்
எனது பாதை...
தேடித் தேடி
தீவிரம் பாடி,
கரை சேரும்
படகின் மிகப் பெரிய
ஓட்டை
எனது யாகம்...

ம்ம்ம்.....
எப்படி ஆக கடவுள்?
இத்தனை 'நான்' ஐ
வைத்துக் கொண்டு?

கவிஜி

எழுதியவர் : கவிஜி (26-May-14, 8:03 pm)
பார்வை : 151

மேலே