விடுபடல்
விடுபடத்தான்
விரும்புகிறோம்
விருப்பங்களைத் தாண்டிய
கட்டாயங்கள்
எப்போதும் துரத்துகின்றன
ஒவ்வொரு கட்டமும்
நிறைவடையாமல்
அடுத்த கட்டத்தில்
வந்து சேர்கின்றன
பாறையின் இடுக்குகளில்
வேரின் பற்றாய்
வாய்க்கும் சிறு கணங்கள்
தவிக்கவும் துடிக்கவும்
தயவின்றி விரட்டுகின்றன.