இதுவும் ஒரு காதல் கடிதம்

உன்னிடம்
காதலைச் சொல்வது
குற்றமென்றால்
சிறை வையேன்
என்னை
உன் இதயத்தில்
ஆயுள் கைதியாக

==============================================

உனது புன்னகை
என்ற மீனை,
என் இதயம் என்ற
கண்ணாடித்தொட்டிக்கு
காதல் என்ற
விலை கொடுத்து
நான்
வாங்கி விடவா

==============================================

வயிற்றுப் பசிக்கு
சோறு போட
அம்மா
என்
இதயப்பசிக்கு
காதல் போட
நீ

==============================================

வாழ்நாள் முழுக்க
உன் கைப்பிடித்து
உன்னுடன் வர
ஆசை
உனக்கு
உடன்பாடு இல்லையென்றால்
உன்
கால்பிடித்தாவது
உடன்வருகிறேன்
என்னை
உன்
காலணியாக்கி விடு

==============================================

புன்னகை என்ற
விதை போட்டு
அனுதினமும்
பார்வை என்ற
நீரூற்றி வருகிறேன்
உனது
இதய நிலத்தில
முளை விடுமா
காதல்

==============================================

அம்மா என்ற
கோவிலில்
அன்பு என்ற
வரம் கிடைத்தது

அப்பா என்ற
கோவிலில்
அறிவு என்ற
வரம் கிடைத்தது

உனது இதயம்
என்ற கோவிலில்
காதல் என்ற
வரம் கிடைக்குமா

==============================================

உனது
முகநூல் முகவரி
தெரியும்
உனது
மின்னஞ்சல் முகவரி
தெரியும்
உனது
வீட்டு முகவரி கூடத்
தெரியும்
உனது
இதயத்தின் முகவரிதான்
தெரியமாட்டேன்
என்கிறது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (27-May-14, 8:14 pm)
பார்வை : 138

மேலே