மழைக்கால தேவதைகள்
மழை வேண்டி
நின்ற நம் பொழுதுகளை...
காதலிடம் ஒப்புவித்து சென்றது
சட்டென்று நினைவிற்குவர
அவசர அவசரமாய்
ஓடி சென்று பார்த்தேன்...
இன்னமும் அப்படியேதான் கிடக்கிறது
நம் பொழுதுகள்..
நல்ல வேளையாய்
இன்னமும் பொழியாமல் தான் கிடக்கிறது...
வாயேன் கொஞ்சமாய்
நனைத்து அனுப்புவோம்
இந்த மழையை..