பேதை தந்தை
தலை மீது தலைவனாய்-எனை
சுமந்தது உன் மனம்
அடி மீது அடிவைத்து -உனை
அடித்தது எந்தன் குணம்..,
ஊருக்குள்ளே தெய்வமென மனதோடு
புகழ்ந்தாய்
தப்பென பல செய்கையில் புலம்பி
தினம் முறைத்தாய் ..,
எழும் போதும்
அழும் போதும்
கை விரல்கள்
மெல்ல தழுவ..,
பூச்சை கண்டால்
பூதமென
கொள்ளும் உந்தன் பயம்...,
ஊட்டும்போதும்
தானாய் உண்ணும்போதும்
தவளை சவாரி சென்றது
எந்தன் மனம்...,
தாய்மடியினில் தவழ்ந்தேன்
இருந்தும் சோர்வாகினாள்
மார்பினில் உனை மிதித்தேன்
மதி இழந்தவனாய் வாங்கினாய்..,
எனை பள்ளி அனுப்ப
பல காரணம் காட்டி
ஈரமானது உந்தன் விழி -உன்
கன்னம் மேலே முத்தமொன்று
கொடுத்ததில் காட்டியது ஒரு வழி..,