மேடையில் ஓர் நாள்

@@@@@@@@@@@@@@@@@@@
மேடையேறி நான் பேசினால் எப்படியெல்லாம்
பேசலாம் என்ற என் கற்பனையில் உருவானது
இந்த படைப்பு அந்த மேடைபேச்சு தோரணையில்
படித்தால் மிகவு நன்றாக இருக்கும் உறவுகளே ..
@@@@@@@@@@@@@@@@@@@

..."" மேடையில் ஓர் நாள் ""...

மேடை பேச்சுக்காய்யொரு சிறு முயற்ச்சி
வணக்கம் என்று சொல்லி பழக்கமில்லை
வாழ்த்துக்கள் கூறி வார்த்தையை வசமாக்கி
நானிங்கு வந்த விடயமத்தை சொல்கிறேன்
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

அரங்கம் ஏறியதில்லை எனக்கென்றுமந்த
ஆர்வம் சிறு துளியும் கூட இருந்ததில்லை
தமிழ்மீதான ஏக்கம் அது தந்த தாக்கமதனால்
உன் வாசலின் கதவை நான் தட்டுகின்றேன்
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

அகர வரிசையிலோ ழகர வரிசையிலோ
தவறேதுமிருப்பின் தாய்போல் அனைத்து
அணைத்தையும் நீயெனக்கு சுட்டிக்காட்டு
அக்கணமே அதை திருத்திக்கொள்கிறேன்
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

வள்ளுவனை தெரியும் பள்ளியறையில்
ஈரடியே கொண்ட அழகு திருக்குறளின்
ஈராயிரம் பொருளினிக்கும் சுவையினில்
ஈரைந்து பாடலே தெரிந்த வகையினில்
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

இளங்கோவடிகளையும் எனக்கு தெரியும்
உறைவாள் கொண்டு குருதி சண்டையிட்ட
காலத்தில் கால் சிலம்பால் வெற்றிகண்ட
கண்ணகியின் சிலையினை கண்டதால்
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

தமிழின் கவியுலகின் மூத்த தாத்தனாம்
கம்பனை நான் கண்டதில்லை ஆனால்
காதாலே நான் கேட்டிருக்கிறேன் அவன்
வீட்டுத்தரியும் தமிழில் கவி பாடுமென்று
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

பாரதியையும் எனக்கு நன்றாய் தெரியும்
பாரதத்தில் தீயென உதித்து தேன்சுவை
கவிசொல்லி தாசியாய் மட்டும் பார்த்த
தாரகையை கைபிடித்தவள் தரமுயர்த்தி
குழந்தைகளாய் இருக்கும்போது நீ கூடி
வாழ எனக்கு கற்றுத்தந்தவன் என்பதால்
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

காந்தியையும் நானறிவேன் நாணயத்தில்
கண் கண்ணாடியணிந்து கைத்தடியோடு
கட்டை ராட்டினத்மதை சுற்றிக்கொண்டே
காணுகின்ற இடமெங்குமே இருப்பதனால்
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

எங்கே தொலைத்தேனென்று தெரியாமலே
கடைசிவரை என்னைனான் காணவில்லை
ஏனோ என்னை மட்டும் நான் இன்றுவரை
ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை
என் வாழ்த்துக்கள் தமிழா வாழ்த்துக்கள்,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (28-May-14, 1:20 am)
Tanglish : meedayil or naal
பார்வை : 83

மேலே