வேதனை அறிந்தவர் யார்

மனித வாழ்கையில் உண்மையான வேதனை
அறிந்தவர் யார்!!!
பார்வைகளில் பேசி உலகினை மறந்து
கனவுகளில் பல்லாண்டு வாழ்ந்து
இன்பத்தில் தளிர்த்து துன்பத்தில் முடிந்து
காதலில் தோற்ற தோழனும் தோழியும்!!
மாதங்கள் பத்து தவமிருந்து
வலிகள் பல சுமைகள் பல தாங்கி
பெற்றெடுத்த அன்பு தேவர்களாம்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரும் !!
உயிர் மூச்சு தந்தவள் யாரென்று அரியது
அழுகையும் பசியும் அறிந்த பிஞ்சு நெஞ்சம்
புது வழக்கை வாழவே பூமியில் வந்து
தெருவினில் எறியப்பட்ட குழந்தையும்!!!
பிள்ளைகளும் மனைவியும் உயரும் விலையும்
வாழ்வது கடினம் ஆனது ஏனோ?
உணவும் இன்பமும் குடும்ப நன்மைக்கும்
கடன் வாங்கிய நடுத்தர குடிமகனும்!!!
ஒருவேளை உணவிற்கு வழியின்றி
ருசிமறந்து பசியறிந்த ஏழையம் உழவனும்!!
வேதனை உணர்தவர்கள்!!
வேதனை அறிந்தவர்கள்!!!