மக்கள் ஒருமித்து வாழ்க இணைந்து - இருவிகற்ப பஃறொடை வெண்பா

தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்றென்ற – மேன்மைத்
திருக்குறளின் பொய்யா மொழிக்கேற்ப வாழ்ந்த
அருந்தவச் செம்மல் அருமைமிகு ’கன்ட்ரோல்’
திருமிகு கன்னியப்பர் நற்புகழ் ஓங்க
ஒருமித்து வாழ்க இணைந்து! 1

தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்றென்ற – மேன்மைத்
திருக்குறளின் பொய்யா மொழிக்கேற்ப வாழ்ந்த
அருந்தவச் செம்மலாம் அண்ணல் - பெருமைத்
திருமிகு சோழவந்தான் கன்னியப்பர் மக்கள்
ஒருமித்து வாழ்க மகிழ்ந்து! 2

ஒரு விகற்ப பஃறொடை நேரிசை வெண்பா

அருட்செல்வம் செல்வத்துள் செல்வமென ஆன்ற
கருணையுள்ளம் கொண்டநற் காட்சி - உருவாம்
திருவாளர்; பொய்யா மொழிக்கேற்ப வாழ்ந்த
அருந்தவச் செம்மலாம் அண்ணல்; - பெருமைத்
திருமிகு சோழவந்தான் கன்னியப்பர் மக்கள்
ஒருமித்து வாழ்க உவந்து! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-May-14, 2:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 131

மேலே