காதலின் சிம்மாசனம்
இளமொட்டாய்
நான் இருக்கும் போது
என் இதயச்செடியில்
அரும்பியது
காதல் மொட்டு
அதை எவரும்
கண்டு கொள்ளாமலே
கருகி சருகாகிப் போனது
ஈரெட்டு வயதினில்
இரண்டாம் காதல்
தளிர் துளிர்த்தது
அது என்
இதயத்தை காயப்படுத்தி
கற்பழித்துச் சென்றது
மூன்றாம் காதல்
இரு மனம்
ஒரு மனமான பின்
இதயத்தில் முளைத்தது
அது என்னை
காதலோடு வாழ வைத்தது.