இரவின் சிறகு

காத்திருக்கும்
கைகளில்
மெல்ல முளைக்கும்
சிறகு,
வண்ணங்களற்ற
விழிகளில்
வானம் தேடி தெரிகிறது
வேகம் கூடி விரைகிறது....

இரை தேடும்
ஆழ் மனதில்
சிறை உடைக்கும்
ஒரு நினைவு....

நிலை என்ன
நிழல் என்ன
இரவென்னும்
பால்வெளியில்
நிறமான என் கனவு....

காடு மலை
மேகமெல்லாம்
கடவுள் தேடும்
காட்சிதானோ!

தேடித் தேடி
திரிகையிலே
தேகம் மாறும்
நிலை ஏனோ...?

சிறகடிக்க
நினைத்து விட்டேன்
தூரம் அது
பாரமில்லை....

சிணுங்கிக் கொண்டே
சிறகடிக்கும்
இரவுக்கொர்
தூரமில்லை....

வேறு வேறு
வேரும் வேறு
இரவைத் தேடும்
நானும் வேறு....

யாரும் யாரும்
யாவரும்
சிறகைப் போல
இரவும் நானும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (29-May-14, 10:36 am)
Tanglish : iravin siragu
பார்வை : 646

மேலே