எங்கும் சுதந்திரம்
![](https://eluthu.com/images/loading.gif)
வீடு கட்டத் தெரியா
மனிதர்கள் (பட்சிகள்) சிரிக்கிறது
கூடு கட்டி வாழ்ந்து ....!
அன்பாக மொழிப் பேசப்
பழகுகிறது வம்பு பேசத் தெரியா
கொஞ்சிப் பேசும் கிளிகள் ...!
அரிசி உண்ணும் எறும்புகள்
தன் உழைப்பைக் காட்டி
தலை குனிய வைக்கிறது ...!
சுகமாய் வாலை ஆட்டி
நன்றி காட்டி
புரிந்திடச் செய்கிறது
குட்டி நாய்க்குட்டி ...!
அடிபட்டதும் காகக் கூட்டம்
ஒற்றுமையுடன் அனைத்தும்
வீர வணக்கம் காகத்திற்கு...!
அடுத்த வீடு எதிர் வீடு
தெரியாமல் வாழ்ந்து
வருத்தமாய் கிராமம்
நகரத்தை நினைத்து....!
எங்களுக்கு எந்த திசையுமில்லை
எந்த நகரமுமில்லை
எந்த கிராமமுமில்லை
எந்த சாதி மதமுமில்லை
இனமெல்லாம் ஒன்றே
ஒரே வழியே ஒரே நீதியே
சுதந்திரம் அன்பு ஒற்றுமை
என்றே பறை சாற்றுகிறது
பட்சிகள் கூட்டம் சிந்து பாடியே
ஆகாய வீதியில் வழிகாட்டியே...!