கொஞ்சமேனும் நினைத்தாயோ

தல நெறைய எண்ணெய் வச்சு
மழிய மழிய இறுக்கிப்பின்னி
குட்டிக்குரா பௌடர் பூசி
கண்நிறைய மை போட்டு
என்கையை நீபிடிக்க
உன்கையை நான்பிடிக்க
பொடிநடையா கதைப்பேசி
மணியடிச்ச பின்னாலே
பள்ளிக்கூடம் போய்சேர்ந்து

வீட்டுப்பாடம் எழுதாம
வாத்தியார்கிட்ட அடிவாங்கி
சிவந்து போன என்கையை
நீ ஊத உன்கையை நான் ஊத
சாப்பாட்டு இடைவெளியில்
நெல்லிபழம் விழுமுன்னு
வேறாரும் போகுமுன்னே
எட்டுவச்சு நாம் ஓடி

விழுந்த ஒரு நெல்லிக்காயை
நாதான் எடுப்பேன்னு ரெண்டுபேரும்
மாறிமாறி சண்டைபோட்டு
தாவிக்குதிக்க நான்தான்
எடுத்தேன்னு நீயும்
நான்தான் எடுத்தேன்னு நானும்
வாக்குவாதம் முத்திப் போயி
தார்ரோட்டுச் சல்லிஎடுத்து
ணங்கென்று நீ வீச
வச்ச குறி தப்பாம என்மண்டை
பிளந்து ரத்தம் வர!

நான் மட்டும் குறைந்தவளா
பதிலுக்கு நான் வீச
உன் மண்டையிலும் ரத்தம் வழிய
விலக்க வந்த வாத்தியாரு
ரெண்டு போரையும் நைய்யப் புடைக்க
கால்தடுக்கி விழுந்தோம்னு
அம்மாகிட்ட பொய்சொல்லி
ஊர்சுத்தி வாழ்ந்தோமே
ஊர்மாறி போனபின்னே
கொஞ்சமேனும் நினைத்தாயோ
என் தோழி நீ சொல்லு..............!

...............சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (29-May-14, 8:47 pm)
பார்வை : 187

மேலே