காத்திருக்கிறேன்
உதிரத்தோடு இணைந்தவள்
உதடுகளோடு பிணைந்தவள்
சத்தமின்றி மனதை
சஞ்சலப் படுத்தியவள்
சிரிப்புகளில் இருதயத்தை
சிதறடித்தவள்
எங்கு போனாள்...........?
கண்ணை இமை
மறக்கும்வரை
கண்ணீர் மண்ணில்
கலக்கும்வரை
இமைக்காது பார்த்த
நொடிகளை எண்ணி
காத்திருக்கிறேன்
கொள்ளையிட்ட
விழிகள்
எங்கு போனது.........?
வசியம் தடவிய
வார்த்தைகள் கொண்டு
என் இரவுகளை
பகலாக்கியவள் எங்கே.........?
வானோடு பறந்த
என் சிறகுகளை வெட்டி
கூண்டுக்குள் அடைத்தவள்
எங்கே. ...........?
அவள் வருகைக்காக
ஒருத்துளி அழுகைக்காக
இன்னும் காத்திருக்கிறேன்
கல்லறையிலும்
விழித்தபடி.............!