அழுகின்ற என் இதயம் உனக்கு புரியுமா 555

பெண்ணே...

நான் ரசித்த மழைத்துளி
என்னை நனைத்த போதெல்லாம்...

ஓடி ஒதுங்கினேன்...

என்னில் இருக்கும் நீ
நனைந்துவிடுவாயோ என்று...

பனிகாற்று என்னை
தழுவிய போதெல்லாம்...

நெஞ்சோடு என் கைகளை
இருக்க கட்டிகொண்டேன்...

என்னில் இருக்கும்
நீ நடுங்கிவிடுவாயோ என்று...

என் ஆசையை
உன்னிடம் சொன்னேன்...

காலம் கடந்து
சம்மதம் சொன்னவள்...

என்னை பிரிய மட்டும்...

சில விநாடிகளிலே
சொன்னாயடி...

தண்ணீரில் தாமரை
வாழ்ந்தாலும்...

இலையில் நீரை
ஒட்டவிடுவதில்லை...

என்னோடு நீ
சிரித்து பேசினாலும்...

உன்னில் நான்
இல்லையென...

காலதாமதமாக
உணர்ந்தேனடி...

கருவறையில் உன் தாயார்
உன்னை சுமந்தாள்...

என் இதய அறையில்
நான் உன்னை சுமந்தேனடி...

இதயம் இல்லாதவளாய்
என்னை நீ தூக்கி எறிந்தாய்...

இதயம் இருந்தால்
நின்று திரும்பி பார்...

அழுகின்ற என் இதயம்
உனக்கு புரியும்...

என் உள்ளதை
உணராத உன்னை...

என் உள்ளதால்
உன்னை வாழ்த்துவேனடி...

என்றும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-May-14, 4:26 pm)
பார்வை : 485

மேலே