பொய்ப்பிரியனின் சண்டைக்காரி

பொய்ப்பிரியனின் சண்டைக்காரி
அந்த மத்தாப்புத்திரியைக் கொண்டுவாயேன்
முதுகில் சுமந்து பறக்கிறேன்
சுற்றித்தெறிக்கும் கனல்கங்குபொறிகளை
மின்மினியாக ஒப்பனைசெய்து
மருகுகின்ற நொடிவேண்டும்
இடைவானில் ஒரு
குட்டிதேவதைகள் நிறையரண்கட்டி
மழைசரம் அமைத்து
உன் விருப்பங்களைநிரப்பிக் குளிக்கிறேன்
அப்பொழுதாவதுசொல்
தேயாபிதற்றல்களுடன்
தேய்ந்துகொண்டிருக்கின்ற
உன் வீரியத்தை உடுத்திக்கொண்டப்
பிறகாவது
உன்னில் நான் கடந்தவனில்லை
இனிமேலும்
நீ தொலைக்கவிருக்கின்ற
இடையிரவுகளின் ஆழ் உறக்கங்களை
களவுகொள்ளப்போகும்
இதுவரையுன்னுள்தேங்கிய
உணரா களேபரங்களின்
கூட்டுத்தொடர்நான் என்பதை
நீயாராயிருந்தால் என்ன
செல்லமாய் அழைத்துவிட
உனக்கொரு
பெயர்வைத்தாயிற்று இங்கு
மிச்சம்வைத்திருக்கும்
உளறல்களை
இன்றேனும் உளறிவிடு
எத்தனை தந்தாலும் தாங்கிவிடுகிறேன்
உன் உணர்வுகள்
கேலிக்குட்பட்டவையல்ல
உனக்கு பிடிக்காமல்போகும்
பட்சத்தில்
காணாமல்போய்விடுகிறேனே,,,
அனுசரன்