நண்பா இது நினைவுகள்

முதல்நாள் கல்லூரிதான்
முதிர்ந்த கசப்பைத் தரும்
மறக்கவில்லை மன்னிக்கவில்லை
அவனை இன்றுவரை
என்னை நிர்வாணமாக்கியவரில்
அவனும் ஒருவன்
மன்னிப்பும் கேட்கவில்லை
மனிதனா அவன்
ஒருவருடம் கூடியதும்
நண்பன் என்றான்
மனக்கசப்பிலே கேட்கவில்லை
மறுபடிக்காக காத்திருந்தேன்
மன்னிக்கத்தகாதவன் அவன் மறந்திருப்பான்
என் மனம் மறப்பதாயில்லை
ஆண்டுகள் ஓட மறுபடி கண்டேன்
இன்று என் மருத்துவமனையில்
அவனை மரணப்படுக்கையில்
கைகூப்பிய அவன் வீட்டார் புறம் நிற்க
நாடிபார்க்கும் என்கை முதலில்
அவன் கண்ணீர் துடைத்தது
மனம் கூறியது
கவலைப்படாதே நண்பா
உன் மக்களுடன் நீ இனியும்
விளையாடுவாய்
வெளியே வந்தேன்
மனம் முதல்முறையாய் இனித்தது
அது என் நண்பன் தந்தது
-இப்படிக்கு முதல்பக்கம்




எழுதியவர் : கௌரிசங்கர் (7-Mar-11, 2:09 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 382

மேலே