உன் எழில்கள்
உன் இருவிழியில்
ஒரு சில மொழிகள்...
அதைப் படித்திடத் துடிக்குது
என் இதழ்கள்!
உன் பார்வையிலே
பல பழ ரசங்கள்...
அதைக் குடித்திடத் துடிக்குது
என் இதழ்கள்!
உன் இதழ்கள் மெல்ல
ஒரு கவிதை சொல்ல...
அதை எழுதிடத் துடிக்குது
என் விரல்கள்!
சில கவிஞர் சொன்ன
பல உவமைகளையே -
அழித்திடத் துடிக்குது
உன் எழில்கள்!