சாலையோர மரங்கள்போல

"சாலையோர மரங்கள்போல"

வருவோர் போவோரையெல்லாம்
ஆசிர்வதித்து மலர்தூவி..
!!!!
நிற்போர் நடப்போருக்கெல்லாம்
நிழல்கொடுத்து நிதானப்படுத்தி..
!!!!
குருவி காகம் பறவைக்கெல்லாம்
கிளைகொடுத்து ஆசுவாசப்படுத்தி..
!!!!
காலை மாலை பகலெல்லாம்
காற்றை சுத்தப்படுத்தி..
!!!!
கண்ணுக்கு குளிர்ச்சிதரும்
பசுமை போர்த்தி..
!!!!
மனதுக்கு இதந்தரும்
ஒளிர்மை நிகழ்த்தி..
!!!!
சாதனைசெய்யும் ஆயுள்முழுதும்
"சாலையோர மரம்"

எழுதியவர் : சீர்காழி சபாபதி (31-May-14, 10:00 pm)
பார்வை : 1626

மேலே