கோடு
இடம் விட்டு
இடம் நகர்கிறோம்
நமது இடம்
கோடிட்ட இடமாகவே உள்ளது
நிற்காமல் நீள்கிறத
நமது கோடு
கோடுகள் அற்ற உலகத்தை
கனவுகளிலும் காண முடியவில்லை
கோடுகளின் துணையுடனே
போகிறோம் வருகிறோம்
நமது கோடே
நீளம் என்ற
கர்வத்தில் நெகிழ்ந்து போகிறோம்
நீளமான கோடு
இன்னும் கிழைிக்கப்படாமலேயே
கிடக்கிறது.