கனா இருக்க கணினி போதுமோ
வெட்டவெளி நடையும்
கொட்டும்மழை நனைவும்
கால்நனையும் நதியும்
காற்றாடும் தேகமும்
கையுறையும் பனியும்
நடுநிசி நிசப்தமும்
நிலவின் இரவுகளும்
வைகறை வருடலும்
இளஞ்சூரிய தழுவலும்
நண்பகல் புழுக்கமும்
செடிகளும் பூக்களும்
செவ்வானமும் மரங்களும்
பறவையும் மிருகமும்
வேதமும் புனிதமும்
வேடமிடும் மனிதமும்
கருத்துப் பிழைகளிலும்
காட்சிப் பேழைகளிலும்
கல்லரை நாதங்களாய்
காண்கிறேன் பிரேதங்களாய்
கசக்கும் அறிவலையும்
பிசகிய கற்றலையும்
புரிந்துவிடவே
பார்க்கிறேன்
இருந்தும்
உணராப் பூவாகி
காலையும் புலருதிங்கே
உயிருள்ள ஜடமாகி
மாலையும் புணருதிங்கே
தினம் மனம்
உரைக்கிறேன் உருகாமலே
மனம் தினம்
உதிர்கிறேன் உதிராமலே
காணல் இறுகக்
கானல் இதமோ?
கனா இருக்க
கணினி போதுமோ?