கோலம்

புள்ளிகளில் பூக்கிறது
கோலம்
கோலங்களில் பூக்கிறது
வாசல்.

ரசித்தும்...
மிதித்தும்...
தாண்டியும்...
மலரும் கோலங்களின்
மாண்புகள் மறையவே இல்லை

வீடு மாறுகிறது
வாசல் மாறுகிறது
போடும் கோலங்கள் தான்
பூமியின் வடிவத்தை புரிய வைக்கின்றன

சிறியதாய்...
பெரியதாய்...
மனசின் திரைகள்
எப்படி விலகுமோ
கோலத்தின் காட்சியும் அப்படியே

ஒவ்வொரு முறையும்
கோலப்போட்டி வலுக்கிறது
கோடுகளில் மறையும் புள்ளியாய்...
போட்டியும்...
கோலம் மட்டுமே வெற்றி கொள்கிறது

எழுதியவர் : முல்லைவாசன் (31-May-14, 8:56 pm)
சேர்த்தது : Ramajayam
Tanglish : kolam
பார்வை : 76

மேலே