அவலம்

சில்லரை மனிதர் நடுவே
"சில்" அறைக்குள்
சில்லரையாய் பேசி
சில்லரையாய் சிரித்தோம்
சில சில்லரைகளுக்காக.

சில்லரைக்காக
சில்லரை மனிதரிடம்
சோரம் போகவும் சிறிதும்
சிந்தை கலங்காத
சில்லரை மாந்தரனோம்.

சில்லரை தெய்வங்களுக்கு
சில்லரையாலே மொய் வைத்தும்
குட்டி தேவதைகள் செய்யும்
சில சில்மிஷங்களால்
தம்பிடிக்கும் பயனின்றி போனதே.

கல்லறை நோக்கியே செல்லும் இந்த
சில்லரை வாழ்க்கையில்
சில்லரையே வாழ்க்கையாய்
சிலநேரம் என்ன,
பலநேரம் ஆனதென்ன ?

எழுதியவர் : நேத்ரா (1-Jun-14, 6:54 am)
Tanglish : avalam
பார்வை : 127

மேலே