மறு ஜென்மம்
![](https://eluthu.com/images/loading.gif)
என் தோழியின் வீட்டில் ஓர்-இளம்பிஞ்சின்
மரண செய்தியை கேட்டேன் ..............
மனமோ கொந்தளித்தது -என் தோழியே
கட்டி அனைத்து அவள் வேதனைகளை
பகிர்ந்து கொள்ள -மனமோ குமறியது .........ஆனால்
அவை அனைத்தும்...........என் மனதினுள்ளே
மட்டுமே நிகழ்ந்தது -காரணம்
எங்களின் பிரிவு - இடைவெளியே ...........
இந்த பிரிவை ஏற்ற்படுதியதுக்காக .........
அந்த இறைவனை நான் கோபிப்பதா ....... ?
இல்லை மண்டி இட்டு வரம் கேட்பதா.....?
எனினும் அவன் முன் மண்டி இட்டேன் ......
என் தோழிக்கு மன ஆறுதலையும் .......
மன தேற்றத்தையும் கொடுத்து -அந்த
இளம்பிஞ்சை -மறு ஜென்மம் ஈன்று
இந்த உலகில் ஆரோக்கிய வாழ்வை -மேற்கொள்ள...
இப்பொழுதோ என் வரத்திற்கு .. ....
செவிசய்ப்பானோ என் இறைவன் .......................
[ என் தோழி வீட்டில் நேர்ந்த துயரம் அவையே
என் உணர்வு வெளிப்பாடு ]