வசந்த கூடுகள்

உங்களை
எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும்
பாதையல்ல நான்;
கடந்த கால நினைவுகளின்
மயக்கமல்ல நான்;

நிகழ்காலத்தின் காற்று -
நான்
கீதங்களோடு வருகிறேன்

பறக்க முடிந்தவர்கள
சிகரங்களில்
வசந்த கூடுகள்
கட்டுங்கள்

பள்த்தாக்கில்
உருட்டிவிடப்பட்டவர்கள்
அங்கே
முனகிக் கொண்டிராமல்
முறிந்த சிறகுகளைத்
தேடுங்கள்

நீங்கள்
இன்றை மறந்த
நேற்றைய அல்லது
நாளைய மனிதர்கள்

மூன்று தலைமுறைகளுக்கான
தேவைகளை அல்லது
துயரங்களைச் சுமக்கும்
மன நோயாளிகள்

*

சின்னஞ்சிறு மனப்பூவே
கவலைகள் என்னும்
மரணத்துகள்களை கொட்டிவிடு;
நான்
பொன்மகரந்தம் பூசுகிறேன்

நமக்கு வசப்படுவதெல்லாம்
இக்கணத்தின்
இனிய மணித்துணிகளன்றி
வேறொன்றுமில்லை

அவற்றில் மனம் கரைந்து
பரவசப்படுவோமே
துளித்தண்ணீரில் சிறகடிக்கும்
சிட்டுக்குருவியைப் போல ...! (1994)

("தரையில் இறங்கும் தேவதைகள் " நூலிலிருந்து )


Always repeated Theme
But
Always required Theme

எழுதியவர் : கவித்தாசபாபதி (1-Jun-14, 4:07 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
Tanglish : vasant koodugal
பார்வை : 94

மேலே