தேசத்தின் அடையாளம்

தேசத்தின் அடையாளம்

நீ ஒரு குரு,
நான் சிஷ்யன்
குரு-சிஷ்யமே
சிரேஷ்ட பந்தம்

நான்
ஒரு சிறு கவி
ஒரு மா கவி குரு

மா கவி ஒன்றை
காண்பதே பேறு
கம்பனைக் கண்டேனா?
பாரதியைப் பார்த்தேனா?
நீதான்
எனக்கு மாகவி.

இக்பால்,
ஒரு தனிப்பால்
சுவைப்பால்,களிப்பால்
உவப்பால்,மிகைப்பால்
சீகிரி,சிவனொளி
மகாவலி,நுவரெலி போல்
என்
தேசத்தின் அடையாளம்.

உன் நூலகம்,
ஒரு ராஜ்யம்
நூற்களெல்லாம் மந்திரிகள்
எழுத்துக்கள் அவ்வளவும்
தேசமக்கள்.

பொன்விழா,
உன்
சிரசின் கிரீடம்
நீயே, கோ
உன்
எழுத்துக்கள் அவ்வளவும்
நூலாகினால்
நீ
மேலும் ஒரு "பில்கேட்"

நீ
ஒரு திட்டத்தின் வெற்றி
படிப்பு வட்டம்,
உன் தனிப்பெரும் உத்தி.

பச்சைப் பச்சையாய்
தமிழ்,
கொச்சை போன ஊரில்
மெச்சிக் காத்தாய் மொழி!

சித்தி லெவ்வை
மசூர்,பாக்கிரையும்
இறக்காமல் செய்தாய்.

கிழக்கின்
பலமிகு சூரியேன,
மேற்கில் இன்னும் உதி!

என் குரு,
மகா கவி இக்பால்,
சீகிரி,சிவனொளி
மகாவலி,நுவரெலி போல்
என் தேசத்தின் அடையாளம்!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (1-Jun-14, 5:39 pm)
சேர்த்தது : Dharga Nagar Safa
பார்வை : 88

மேலே