பணம்

அச்சடித்த தாள்
ஒன்று
ஆட்டிவைக்குதடா !
அது ஆசைக்காட்டி
ஆசைக்காட்டி
அழிவைத் தருதடா!
போட்டி ,பொறமை
மனதில்
தோன்றிவிட்டதடா !
பணம்
தந்த போதையில்
மனித இனம்
மயங்கிவிட்டதடா!!!


பணம்
சேர்ப்பதற்கு
குணம் மாறலாமா?
மனிதநேயத்தை
இந்த பணம்
தின்னலாமா?


பணம் பணம் என்று
நிதம்
எண்ணலாமா?
பகுத்தறிவை
இந்த பணம்
தின்னலாமா?

இந்த தத்துவத்தை
அறியாமல்
ஆசை கண்ணை
மறைக்குது ....!
இந்த உண்மையெல்லாம்
புரியும் போது
தலைமுடியோ
நரைக்குது .....!

எழுதியவர் : கு.முத்துராஜா (1-Jun-14, 8:30 pm)
Tanglish : panam
பார்வை : 98

மேலே