கசந்து போகும் உறவுகள்
உறவுகளில்
"மதிப்பெண்கள் "
பட்டியல்
மலரும் போது
---------------------------------------------------------------------------
மண மேடையில்
சூடிய மாலை
வாட
துவங்குகின்றது
----------------------------------------------------------------------------
உயிரை படைத்து
உணவு படைத்து
உடலை கொடுத்து
உடலை காத்து
உன்னதமான
சேவைகளில்
---------------------------------------------------------------------------
என் பங்கு
என் மதிப்பு
ஏற்றம் என்ற
எண்ணங்கள்
வித்திடும் போது
---------------------------------------------------------------------------
கீறல்கள்
----------------------------------------------------------------------------
கீறல்கள்
விரிசலாகி
விரிசல்களால்
விரிந்து உடையும்
உறவுகள்
---------------------------------------------------------------------------
எல்லைக்கு மீறி
சக்த்திக்கு மீறி
ஆற்றும் பணிகள்
ஆழ்ந்த அனுதாபத்தை
ஆலமரமாய் விழுதிட்டு
ஆணி வேருக்கு
ஆட்டத்தை அளித்து
அனுதாபம் என்ற
அலை
--------------------------------------------------------------------------
அனுதாபத்தின்
அறுவடையாய்
---------------------------------------------------------------------------
விவாதங்கள் ^^^^
சர்ச்சைகள் ^^^^^
கருத்து வேறுபாடுகள் ^^^^
மன அழுத்தங்கள் ^^^^
கருத்து வீச்சுகள்^^^^^
கருத்து வீச்சுகள்
கதிர் வீச்சாய் மாறி
காயங்கள்
காயங்களுக்கு
கதிர் வீச்சை தேடி
காலமெல்லாம்
ஓட்டங்கள்
----------------------------------------------------------------------------
"நான் "
"நீ"
என்கின்ற இரு
வார்த்தைகளும்
இணைந்து
"நாம் "
என்று
இணையும் போது
----------------------------------------------------------------------------
மன முதிர்ச்சி எனும்
மருந்து
மாற்றத்தை அளித்து
மண வாழ்க்கை என்ற
மலரில்
மணத்தை வீசி
வாடாத மாலையாய்
வாழ்க்கை எனும்
வளமான
கழுத்தில் என்றென்றும் ^^^^^^^^
-----------------------------------------------------------------------
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்