கவி எழுத

தெரியாவிட்டாலும்
எழுதுகிறேன் இந்த
கவியை!
கவி எழுத
கம்பனாய் பிறக்க
வேண்டியது இல்லை
எழுத தெரிந்தால்
போதுமானது!

எதுகை மோனை
தேவை இல்லை
எழுது கோலும்
வெற்று காகிதமும்
எழுத தெரிந்துஇருத்தலும்
போதுமானது!

கவித்துவம்
தேவை இல்லை
கற்பனையுடன்
இயற்கையை காதலிக்க
தெரிந்தால் போதுமானது !

பெண்ணை நேசிக்க
தேவை இல்லை
தாய் மண்ணை
நேசிக்க தெரிந்தால்
போதுமானது!

காதல் தேவை
இல்லை - கனவு
ஒன்றே போதுமானது!

நேசம் கொள்ளுங்கள்
குயிலின் குரல்
மீது மட்டுமல்ல - காகத்தின்
கரைச்சல் மீதும்!!

இரைச்சலை கூட
இனிமையாய் கேள்
எரிச்சல் இல்லாமல்!!

உன்னை நீயே
காதலி!

புறத்தோடு இணைத்து
அகத்தையும்
வர்ணித்து பார்!!

புனைந்து புனைந்து
எழுதிப்பார் - கண்ணில்
புலனாவதை எல்லாம்
வர்ணித்துப் பார்!!

உனக்கும் தெரியாமல்
வெளிவருவான் - உன்னில்
உறங்கும் கவிஞன்!!

உங்கள் சகா
******** பயமறியான்*********

எழுதியவர் : பயமறியான் (1-Jun-14, 7:23 pm)
Tanglish : kavi elutha
பார்வை : 85

மேலே