பயமறியான் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f0/hviub_7679.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பயமறியான் |
இடம் | : அலங்காநல்லூர் |
பிறந்த தேதி | : 07-Sep-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 164 |
புள்ளி | : 24 |
என்னை பற்றி எழுதுவதற்கு எழுத்தாளர் எவரும் பிறக்கவில்லை, இன்னும் சொல்ல போனால் எழுதும் அளவிற்கு நான் பெரிதாய் ஏதும் செய்திடவும் இல்லை..
புதியதை கற்கவும் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளவும் முயற்சி செய்யும் ஒருவன்
கர்வமாய் சொல்ல வேண்டுமெனின் எனை ஈன்ற தமிழ்த் தாயின் மகன்களுள் நானும் ஒருவன்
தமிழை எதிர்ப்பது எமனாயெனும் அவனையும் எதிர்போம்
பயமறியான்
மனமே அர்த்தம் கொள்
மாற்றான் உன்மேல்
வெறுப்புமிழின்
எவன்சொல்
தலைகொணா சுயவாழ்வு
கொண்டாயென..
ஈடுகட்டும்
இனியவளின் இழப்பை
நட்பு
இமைமுடி அளவேனும்
உண்டோ ஏதேனும்
நட்பிற்க்கிணையாய்
--
என்றும் அன்புடன் உங்கள் சகா
**பயமறியான்**
பிறப்பால் தனியாக
கசப்பினும் நிசமாய்
இறப்பும் தனியாகத்தான்
வாழ்நாளும் தனிஎனில்
பொருளென்னவோ
வாழ்வின் நிலை என்னவோ
தனிமை விரும்பி
தான்சில நேரம்
நான் இன்று
அந்த தனிமையும்
தனிமைப் படுத்த
நினைக்கிறது
பிறப்பால் தனியாக
கசப்பினும் நிசமாய்
இறப்பும் தனியாகத்தான்
வாழ்நாளும் தனிஎனில்
பொருளென்னவோ
வாழ்வின் நிலை என்னவோ
தனிமை விரும்பி
தான்சில நேரம்
நான் இன்று
அந்த தனிமையும்
தனிமைப் படுத்த
நினைக்கிறது
எப்போது தொலைத்தேன்
பால்யத்தை
கிறுக்கிய கையெழுத்தும்
தவறிய வார்த்தையிலக்கணமும்
சரியாகிய போதா
புத்தக மயிலிறகு குட்டியிடாதெனும்
நிசமும் பாட்டிகதை பல
உண்மையும் உரைத்த போதா
சன்னலோர இருக்கைச்சண்டையும்
புகைவண்டி தடத்தில்
காந்ததேடலும் நின்ற போதா
வகுப்பினில் ஆண் பெண்ணென
தனியாய் அமர்த்திய போதா
பேருந்தின் இருக்கைகள் பெண்
இருக்கை என அமர தடுத்த போதா
எப்போது தொலைத்தேன்
பால்யத்தை
தோழியின் தோள்சாய தடைகள்
நுழைந்த போதா இல்லை
கன்னம் கிள்ளி சிரிக்கும்
கன்னியர் நிறுத்திய போதா
முழுக்கைசட்டை வாங்கி
முழங்கை வரை மடக்கிய போதா
பல்துலக்கும் குச்சியும் பற்பொடிய
என் முதல்
அழுகை கண்டு
அதை முத்தத்தால்
நிறுத்தியவள்
முதல் நண்பி - என் தாய்
என் முதல்
விழுதலைக் கண்டு
சிரத்தால் என்னை
நேர்நடை பழக்கியவர்
முதல் நண்பன் - என் தந்தை
பிடிவாதம் ஆயினும்
பிடித்தம் செய்யினும்
எனக்காய் சில நேரம்
விட்டுக்கொடுத்த இரு
சிறந்த தோழிகள் - என் சகோதரிகள்
அகரம் முதல்
தொடப்போகும் சிகரம்
வரை இலக்கணம்
கற்றுத் தந்த ஆசான்கள்
ஏதுமறியா பருவத்தில்
எதிர்பாரா ஏக்கமின்றி
மாலையானதும்
மழைத்துளி போல்
சேர்ந்தாடும் வீதி நண்பர்கள்
என்ன உண்டாலும்
பாதியை பறித்துண்டு
சின்னஞ்சிறு சண்டைகளால்
சட்டையை கிழித்து
காகித கப்பல் செய்து
கழிவு நீரில்
தெரியாவிட்டாலும்
எழுதுகிறேன் இந்த
கவியை!
கவி எழுத
கம்பனாய் பிறக்க
வேண்டியது இல்லை
எழுத தெரிந்தால்
போதுமானது!
எதுகை மோனை
தேவை இல்லை
எழுது கோலும்
வெற்று காகிதமும்
எழுத தெரிந்துஇருத்தலும்
போதுமானது!
கவித்துவம்
தேவை இல்லை
கற்பனையுடன்
இயற்கையை காதலிக்க
தெரிந்தால் போதுமானது !
பெண்ணை நேசிக்க
தேவை இல்லை
தாய் மண்ணை
நேசிக்க தெரிந்தால்
போதுமானது!
காதல் தேவை
இல்லை - கனவு
ஒன்றே போதுமானது!
நேசம் கொள்ளுங்கள்
குயிலின் குரல்
மீது மட்டுமல்ல - காகத்தின்
கரைச்சல் மீதும்!!
இரைச்சலை கூட
இனிமையாய் கேள்
எரிச்சல் இல்லாமல்!!
உன்னை நீயே
காதலி!
ப
நீ நிஜமானவன்
நிழல் போல்
என்னோடிருக்க
நினைப்பவன்
உணர்வுள்ளவன்
என்னுள்ளிருபவர்களில்
உயர்வானவன்
சிகரம் தொட
நினைப்பவன்
சிந்திக்கத் தெரிந்தவன்
கோபம் எனும்
கொடியோனை
கொல்ல நினைப்பவன்
புகைப்பவன்
என்றாலும் யாருக்கும்
புகைச்சல் இல்லாதவன்
இனியவன்
எவர்க்கும் இன்னா
செய்ய மறுப்பவன்
நீர் போன்றவன்
என்றும் நீர்த்துப்
போகாதவன்
உன் நெகிழும் புன்னகை
நெஞ்சை வருடும்
கசக்கும் சில நேரம்
உன் கோபம் - பின்
காற்றோடு கரைந்து போகும்
காதல் செய்
உன்னை நீயே
கர்வத்தோடு
காவியம் படை
என்னுள் உன்னைப்போல
உன்னுள் ஒருவனாய்
எப்போதும் நான்
விட
உடன் பிறக்காதவன்
உயிரால் இணைந்தவன்
உள்ளம் கலந்தவன்
மறந்தால் எதிர்ப்பவன்
மனதால் கவர்ந்தவன்
எதிர்ப்புகள்
எத்துனைகொள்ளினும்
துருப்பாய் எனைக்
காப்பவன்
கடைசிக்
கண்ணிமைப்பிலும்
இறுதி சுவாசத்திலும்
கூட உனை
எதிரியாய் காணாதவன்
*எவனோ ஒருவனல்லன்*
கர்வம் கொள்ளாதவன்
கண்டும் காணமல்
செல்லாதவன் - கையில்
இருப்பதைப் பகிர்பவன்
பசுந்தோல் போர்த்தாதவன்
பகைமை இல்லாதவன்
முகத்திரை கொள்ளாதவன்
நினைவில் மட்டுமல்ல
நிஜத்திலும் நிலையானவன்
*எவனோ ஒருவனல்லன்
அவனே
என்னுடைய
எனக்கான
என்
" நண்பன் "