அசோக் 1990 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அசோக் 1990 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 2 |
விண்மீன் பிடிக்க எண்ணி
விரைவாக்கினேன் ஊர்தியை
நெடுந்தொலைவு நகர்ந்த பின்னும்
நெருங்கக்கூட இயலவில்லை
இயன்றவரை முயற்சித்தும்
அதன் வேகம் போகவில்லை
இயற்கையின் தொழில்நுட்பம்
அதிநவீனம் போல
ஏளனமாய் பார்த்துவிட்டு
ஏதோ ஒன்றை சொல்லியது
மொழிபெயர்ப்பு இல்லாவிடினும்
மொழிந்த வரி அறிந்துக்கொண்டேன்
" ஆடும் வரை ஆடு
கூடும் வரை விரைவாய்
நாடும் இடம் அடைவாய்"
இரைதேடி போனவனை
இரையாக்க சமூத்திரம் வரும்
தன் கல்வெட்டி எடுத்தவனை
களவாட எரிமலை எழும்
தன் புனிதத்தை கெட்டுத்தவனை
தேடி காட்டாற்று கூட்டம் எல்லாம்
வீட்டோரம் வருகை தரும்
மிதிபட்டு கிடந்த மண்ணும்
வாய்திறந்து வாரிக்கொள்ளும்
மிதமிஞ்சிய
ராமனாய் வாழ் என
சொன்னார்கள் வில் எடுத்தேன்
மோசமானவன் என்றார்கள்
கிருஷ்ணனை கடவுள் என்றார்கள்
இருமணம் புரிந்து கொள்ள கேட்டேன்
பாவி என்றார்கள்
ஏசு போல் இரு என்றார்கள்
மறு கன்னம் காட்டினேன் கோழை
என்றார்கள்
புத்தனை சிறந்தவர் என்றார்கள்
மரத்தடி அமர்ந்தேன் பைத்தியம்
என்றார்கள்
அதுபோல் வாழ் இதுபோல் வாழ்
என முன்னுதாரணம்
காட்டினர்
அதுபோல வாழ
நினைத்தால் பின் இருந்து
தூற்றினர்
அதுபோல் இதுபோல்
என சொல்லும் முன்
எவனிடம் குறையே இல்லை ..........?
என பார்த்து சொல்
நான் அதுவரை
நானாகவே வாழ்கிறேன்
ராமனாய் வாழ் என
சொன்னார்கள் வில் எடுத்தேன்
மோசமானவன் என்றார்கள்
கிருஷ்ணனை கடவுள் என்றார்கள்
இருமணம் புரிந்து கொள்ள கேட்டேன்
பாவி என்றார்கள்
ஏசு போல் இரு என்றார்கள்
மறு கன்னம் காட்டினேன் கோழை
என்றார்கள்
புத்தனை சிறந்தவர் என்றார்கள்
மரத்தடி அமர்ந்தேன் பைத்தியம்
என்றார்கள்
அதுபோல் வாழ் இதுபோல் வாழ்
என முன்னுதாரணம்
காட்டினர்
அதுபோல வாழ
நினைத்தால் பின் இருந்து
தூற்றினர்
அதுபோல் இதுபோல்
என சொல்லும் முன்
எவனிடம் குறையே இல்லை ..........?
என பார்த்து சொல்
நான் அதுவரை
நானாகவே வாழ்கிறேன்
"மூன்றாம் பால்"
கசக்கி எறியப்படும் இறைவனின்
கவிதை நான்
எனது எழுத்துக்களில்
தனித்துவம் இல்லை
இருபால் இணைவில்
ஒருபால் பிறக்க
இருபால் குணமும்
இணைந்தே கிடக்க
அழகிய வளர் தருணங்களில்
அழிக்கபடும் எனதெழுத்துக்கள்
வள்ளுவனின் மூன்றாம் பால்
தனை உலகம் ஏற்க்க
வாழ்வினில் மூன்றாம் பால்
எனது உலகை மறுக்கிறது
முகம் சுழிக்க வைக்கும்
அழகானோம்
உடல் பசிக்கு என
அழைப்பானோம்
உடல் கண்டு கோணும் உலகும்
குணம் தன்னை காணா உலகு
பிரிவினை வகுப்பில் கூட
ஓர் பிரிவென இணைக்கா உலகு
குற்ற செய்கைக்கு தண்டனை இல்லை
பெற்ற மெய்தனக்கு தண்டனை பெற்றோம்
பெற்றோர் கூட விற்றதை கண்டோம்
நான் மணம் அற்ற மல்லிக
விண்டதொரு உலகில் தண்டது நிமிர்த்தி
கண்டது இங்கு உயரிய சிறப்பு
கொண்டதன் பெயரோ மானிட பிறப்பு
நாலும் தெரிந்திட ஆறதை பெற்று
நால்திசை சென்று பாரதை கற்று
சொல் முதல் வில் வரை
நாளும் வளர்த்து உலகை
காலடி வீழ்த்திய இனத்தோன்
தொழில்வழி வகுத்த பிரிவினை இன்று
தொடர்வழி வருகையில் சாதியாய் நின்று
இடர்தனை கொடுக்குது உயிர்தனை கொன்று
நடந்திடும் போர்களோ முடிவது என்று......?
இறையது வழிபடும் முறைதனை தேடி
மனமதை ஒருநிலை படுத்திட நாடி
மதமதை தொடர்ந்திட்ட மானுடம் கோடி
மனிதத்தை இழந்திட்ட சோகமே மீதி
பிரிவினை வளர்த்திடும் சாதிகள் வேண்டாம் தன்
பிறப்பை மறந்திட்ட மதங்களும் வேண்டாம்
பிரியமும் நேசமும
ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..
ரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் High BP (Blood Pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..
அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..
மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர
முதல் விதி:
விழி ஈர்ப்பு விசை= இதயத்தின் எடை( அதன் துடிப்பு மாறுபட்ட வீதம்).......
இரண்டாம் விதி:
விழி ஈர்ப்பு விசை செயல்படாதவரை எந்த ஒரு இதயமும் இயல்பாகவே இருக்கும்.
மூன்றாம் விதி:
காதல் சொன்னவுடன் அதற்கு சமமான எதிர் விசை ( அடியோ உதையோ) நிச்சயம் கிடைக்கும்.
செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!
இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!
கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!
கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன
மழையை வேண்டி வேண்டி
கேட்கும் மானிடம் தான்
வருகையில் ஒளிந்துகொள்ளும்........
மாற்றமும் சிலநேரங்களில்
மழை போல் ஆகிவிடுகின்றன........
வரவேண்டும் என நினைபவர்
எல்லாம் ஓடி ஒளிந்து
கொள்வதால்............