அது போல் இது போல்

ராமனாய் வாழ் என
சொன்னார்கள் வில் எடுத்தேன்
மோசமானவன் என்றார்கள்

கிருஷ்ணனை கடவுள் என்றார்கள்
இருமணம் புரிந்து கொள்ள கேட்டேன்
பாவி என்றார்கள்

ஏசு போல் இரு என்றார்கள்
மறு கன்னம் காட்டினேன் கோழை
என்றார்கள்

புத்தனை சிறந்தவர் என்றார்கள்
மரத்தடி அமர்ந்தேன் பைத்தியம்
என்றார்கள்


அதுபோல் வாழ் இதுபோல் வாழ்
என முன்னுதாரணம்
காட்டினர்

அதுபோல வாழ
நினைத்தால் பின் இருந்து
தூற்றினர்

அதுபோல் இதுபோல்
என சொல்லும் முன்
எவனிடம் குறையே இல்லை ..........?

என பார்த்து சொல்
நான் அதுவரை
நானாகவே வாழ்கிறேன்

எழுதியவர் : கவியரசன் (21-Jan-15, 2:24 pm)
Tanglish : athu pol ithu pol
பார்வை : 127

மேலே