மதம்
கனவில்..
கடவுள் என்னைக் கேட்டார்
நீ இந்துவாகப் பிறக்கின்றாயா?
சம்மதம் சர்வேஸ்வரா என்றேன்..
கடவுள் என்னைக் கேட்டார்
நீ கிறிஸ்துவனாகப் பிறக்கின்றாயா?
ஏற்றுக் கொள்கின்றேன் ஏசுபிரானே என்றேன்..
கடவுள் என்னைக் கேட்டார்
நீ முஸ்லிமாகப் பிறக்கின்றாயா?
ஆகட்டும் அல்லாவே என்றேன்..
கடவுள் என்னைக் கேட்பதற்குள்
என்னை மதத்துடன் பிறக்க வைக்காதீர்
ஒரு மனிதனாகப் பிறக்க வை என்றேன்..
கடவுளைக் காணவில்லை!!
கண்விழித்துப் பார்த்தேன்
தலையில் மொட்டை,
நெற்றியில் பட்டை,
நெஞ்சினில் சிலுவை,
மசூதியில் தொழுகின்றேன்,
புத்தம் சரணம் கச்சாமி!