பொ.மணிக்குமரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பொ.மணிக்குமரன் |
இடம் | : சுங்கை பூலோ, மலேசியா |
பிறந்த தேதி | : 01-Apr-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 6 |
தமிழை விரும்பும் தமிழன்.
கனவில்..
கடவுள் என்னைக் கேட்டார்
நீ இந்துவாகப் பிறக்கின்றாயா?
சம்மதம் சர்வேஸ்வரா என்றேன்..
கடவுள் என்னைக் கேட்டார்
நீ கிறிஸ்துவனாகப் பிறக்கின்றாயா?
ஏற்றுக் கொள்கின்றேன் ஏசுபிரானே என்றேன்..
கடவுள் என்னைக் கேட்டார்
நீ முஸ்லிமாகப் பிறக்கின்றாயா?
ஆகட்டும் அல்லாவே என்றேன்..
கடவுள் என்னைக் கேட்பதற்குள்
என்னை மதத்துடன் பிறக்க வைக்காதீர்
ஒரு மனிதனாகப் பிறக்க வை என்றேன்..
கடவுளைக் காணவில்லை!!
கண்விழித்துப் பார்த்தேன்
தலையில் மொட்டை,
நெற்றியில் பட்டை,
நெஞ்சினில் சிலுவை,
மசூதியில் தொழுகின்றேன்,
புத்தம் சரணம் கச்சாமி!
என்னை உனக்குள் தொலைத்தேன்
உன்னை எனக்குள் தொலைத்தேன்
உன்னைக் கேட்காமல் - என்
உள்ளம் கேட்காமல்..
கைக்குள் அடங்கும் சின்ன நிலாக்கள்,
வாய்க்குள் ருசிக்கும் வண்ண நிலாக்கள்.
..
லட்டுகள்..
தமிழாண்ட மீசையும்
தமிழை ஆண்ட முண்டாசும்
தனக்கே உரித்தான - பாரதியெனும்
தங்கத் தமிழன் காலத்தில் - நான்
தவழாமல் போனேனே - அவன்
தமிழைக் கேளாமல் வீண்தானே..
கன்னித் தமிழென
கவி சொல்லி
காட்சிக்கு மொழியெழுதி
காலமெல்லாம் தமிழெழுதி
கண்ணே கலைமானே
கடைசியாய்ச் சொன்னாயே - அதை
காது குளிரக் கேட்பதற்கு
பிறவாமல் போனேனே..
விவேகச் சிங்கமென்றும்
வீரத் துறவியென்றும்
விண் வியக்க புகழெய்தி
விவேகானந்தராய் வீற்றிருந்த
வீர முனி உன்னிடம்
சீடனாய் இருந்திருக்க - நானும்
இயலாமல் போனேனே..
கடல் கொண்டு
கடாரம் வென்று
கலையுலக தொண்டாய்
கற்கோயில் கொண்டாய்
கடை வீரனாய்க் கூட - உன் படையில்
கடைசியில் நில்ல
வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?
ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!
ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!
நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,
ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........
அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?
காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!
உழைப்பை வி