நண்பர் தின நல்வாழ்த்துக்கள்

என் முதல்
அழுகை கண்டு
அதை முத்தத்தால்
நிறுத்தியவள்
முதல் நண்பி - என் தாய்

என் முதல்
விழுதலைக் கண்டு
சிரத்தால் என்னை
நேர்நடை பழக்கியவர்
முதல் நண்பன் - என் தந்தை

பிடிவாதம் ஆயினும்
பிடித்தம் செய்யினும்
எனக்காய் சில நேரம்
விட்டுக்கொடுத்த இரு
சிறந்த தோழிகள் - என் சகோதரிகள்

அகரம் முதல்
தொடப்போகும் சிகரம்
வரை இலக்கணம்
கற்றுத் தந்த ஆசான்கள்

ஏதுமறியா பருவத்தில்
எதிர்பாரா ஏக்கமின்றி
மாலையானதும்
மழைத்துளி போல்
சேர்ந்தாடும் வீதி நண்பர்கள்

என்ன உண்டாலும்
பாதியை பறித்துண்டு
சின்னஞ்சிறு சண்டைகளால்
சட்டையை கிழித்து
காகித கப்பல் செய்து
கழிவு நீரில் ஓடவிட்டு
காலம் கழித்தவர்கள்
என் ஆரம்பபள்ளி நண்பர்கள்

நீயா நானா என
சில நேரம் மோதி
கன்னிகள் முன் கதாவாக
முயன்று களித்த கழித்த
பருவவயது பள்ளி நண்பர்கள்

கொக்கரிக்கும் சேவலாய்
எவனிடனும் நானென
சட்டையை தூக்கிவிட்டு
போனவன் வந்தவனென
எல்லோரையும் எத்தளித்து
அன்பு அடி உதை
களி கூத்துயென
கடத்திய கல்லுரி நண்பர்கள்

கண் பார்க்காமலே
இணையத்தில் தொடங்கி
இதயத்தில் இணைந்து
இருக்கும் இணைய நண்பர்கள்
நண்பர்களாய் வந்த உறவுகள்

பிழைக்கவந்த இடத்தில்
உடன் பிறந்தவன் போல்
நடத்தும் சென்னை நண்பர்கள்

அரவனைப்பில்லை
எனினும் அரட்டையோடிருக்கும்
அலுவலக நண்பர்கள்

நான் நேசிக்கும்
தற்கால எதிரிகளான
எதிகால நண்பர்களுக்கும்

பிரிந்தோர்க்கும்
எதிர்போர்க்கும்
உடனிருப்போர்க்கும்
இந்த வார்த்தைகளை
சமர்பிக்கிறேன்

எழுதியவர் : Bayamariyaan (3-Aug-14, 9:43 pm)
பார்வை : 130

மேலே