எங்கே என் நண்பன் குரு

இருவரும் இணையாமல் இருந்தாலும்,
நினைவுகளால் பிணைந்தே வாழ்கிறோம் !
இருவரும் எங்கெங்கோ இருந்தாலும்,
இதுவரை பிரியாதே வாழ்கிறோம் !
உன்னோடு நானிருந்த நொடிகள்,
உள்ளத்தில் இப்போதும் இனிக்குதடா,
உனை நினைக்கும் போதெல்லாம்,
நெஞ்சம் துள்ளிக் குதிக்குதடா !
உன் பெயரைச் சொன்னாலே,
உள்ளுக்குள் இன்பம் பொங்குதடா !
எந்தன் வெற்றிக்கு பின்னால்,
இருந்திடும் பேராற்றல் நீயடா !
என்னருகில் இல்லை என்றாலும்,
உன் நினைவில் வாழ்க்கையடா !
எங்கே என் நண்பன் குரு ?
என்றும் உனக்காக காத்திருப்பேன் திரு...