நண்பன் - சி எம் ஜேசு

மழையில் நனையும் போது
குடையாய் கைவிரிப்பவன் நண்பன்

குளிரில் நடுங்கும் போது
போர்வையாய் இருப்பவன் நண்பன்

கவலையில் கதறும் போது
குழந்தையாய் தேற்றுபவன் நண்பன்

தாகத்தால் துடிக்கும் போது
குவளையில் நீராய் வருபவன் நண்பன்

தேகத்தில் காயங்கள் படும்போது
மருந்தாய் படிந்து தேற்றுபவன் நண்பன்

உறவுகள் அற்றபோது
உயிராய் வாழ்பவன் நண்பன்

வாழ்வியலில் வாழ்வதற்கு
உருதுணையானவன் நண்பன்

எழுதியவர் : நண்பன் (3-Aug-14, 10:31 pm)
பார்வை : 121

மேலே