பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே ஸ்ரீகாந்த்

நீ நிஜமானவன்

நிழல் போல்
என்னோடிருக்க
நினைப்பவன்

உணர்வுள்ளவன்
என்னுள்ளிருபவர்களில்
உயர்வானவன்

சிகரம் தொட
நினைப்பவன்
சிந்திக்கத் தெரிந்தவன்

கோபம் எனும்
கொடியோனை
கொல்ல நினைப்பவன்

புகைப்பவன்
என்றாலும் யாருக்கும்
புகைச்சல் இல்லாதவன்

இனியவன்
எவர்க்கும் இன்னா
செய்ய மறுப்பவன்

நீர் போன்றவன்
என்றும் நீர்த்துப்
போகாதவன்

உன் நெகிழும் புன்னகை
நெஞ்சை வருடும்

கசக்கும் சில நேரம்
உன் கோபம் - பின்
காற்றோடு கரைந்து போகும்


காதல் செய்
உன்னை நீயே
கர்வத்தோடு
காவியம் படை

என்னுள் உன்னைப்போல
உன்னுள் ஒருவனாய்
எப்போதும் நான்

விடியும்
ஒரு நாள் நமக்கு
அன்று வளைப்போம்
விண்ணையும் வில்லாக

அந்தநாள் இந்த
நாளாகட்டும்
எதிர்ப்புகள் தூளாகட்டும்

இமை திறந்திடு
சகா இதோ
நமது வழி

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பனே

ஆரம்பமாகட்டும்
நமது ஆட்டம்

வாழ்த்துக்களுடன்
********பயமறியான்****

எழுதியவர் : பயமறியான் (1-Jun-14, 6:40 pm)
பார்வை : 156

மேலே