இதோ இன்று உன் பிறந்தநாள் வினோத்

இதோ இன்று
உன் பிறந்தநாள்

பிடித்துவிட்டாய் தனியிடம்
சகா இமையில்
மட்டுமல்ல நண்பர்களின்
இதயத்திலும்

வினையினை கொடுக்கும்
வினோத நட்பு - அல்லவே
வினோத்தின் நட்பு

சிரிப்பாய்ச் சிதறும்
சிந்தனைகள் உன்
இன்னல்களை போக்கட்டும்

அழிந்துபோகா ஆழி
அமைதி கொள்வதினால்
புதைந்துபோகா பூமி
பொறுமை கொள்வதினால்

இரண்டும் கொண்டவன்
சகா நீ - ஆழிபேரலை
போலெழு ஒருநாள்
ஆகாயம் உன்வசமே

வறியினில் கொடுத்திடவும்
வலியினை பகிர்ந்திடவும்
இந்நாளல்ல எந்நாளும்
உணர்வுகளாய்
உயிர் சுவாசமாய்


உன்னோடு எப்போதும்
நாங்கள்

வாழ்த்துக்களுடன் சகா

****பயமறியான்****

எழுதியவர் : பயமறியான் (1-Jun-14, 7:07 pm)
பார்வை : 138

மேலே