+வாடகைக்கு வீடு கிடைக்குமா+

வரப்புமேட்டில் உனக்கு வீடு
**வயலுக்குள்ளே எனக்கு வீடு
மருந்துபோட மனுசன் நினைக்க
**நமக்குஇல்ல சொந்தவீடு

நாலுஊரு தாண்டி வந்தோம்
**நாலுதலமுற முன்ன வந்தோம்
ஆலுபோல இடத்தை பெருக்கி
**அழியாம செழிச்சு நின்னோம்

நாம போட்ட கும்மாளத்தில்
**மனுசன் அரண்டு போயிருந்தான்
மருந்து போட யோசிச்சவன்
**பாதி பேர கொன்னுபுட்டான்

இருந்தவீட ஒடச்ச அவன்
**தொரத்தி தொரத்தி அடிச்சுபுட்டான்
வாடகைக்கு ஒரு வீடிருந்தா
**சொல்லுங்கையா ஓடி வாரோம்

குறிப்பு: நாங்க யாருனு தெரியுதா?

இல்ல எலினு சொல்லித்தான் ஆகணுமா?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jun-14, 8:48 am)
பார்வை : 109

மேலே